திருச்சி,எடமலைப்பட்டி புதூர், காந்தி நகர் 2-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன்( வயது 67 ).இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக அவரது நடமாட்டம் வெளியே தெரியவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தபோது பூட்டிய வீட்டுக்குள் கௌதமன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட் நிலையில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.