முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 2 குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்திய திருச்சி மலைக்கோட்டை பகுதி த.வெ.க. நிர்வாகி…!
தமிழக வெற்றிக்கழக தலைவரும், முதல்- அமைச்சருமான ஜோசப் விஜய்க்கு வருகிற ஜூன் 22ம் தேதி பிறந்தநாள் ஆகும். த.வெ.க. பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் அறிவுறுத்தலின்படி, முதல்வரின் பிறந்தநாள் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்கா சௌகத் வழிகாட்டுதலுடன், மலைக்கோட்டை பகுதியின் முதல் நலத்திட்டமாக 17வது வார்டு சத்தியமூர்த்தி நகரில் பெற்றோர் இல்லாத 2 குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த உதவி கோரிய நிலையில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் கி.சதிஷ்குமார் , நேரடியாக பள்ளிக்கு சென்று 2 குழந்தைகளுக்கும் பள்ளி ஆண்டு கட்டணத்தை செயின்ட் மேரிஸ் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் செலுத்தினார். இந்நிகழ்வில் மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல, திருச்சி மாநகர் மாவட்டம், கிழக்கு சட்டமன்றத் தொகுதி எஸ்.டி.நிர்மல் சார்பாக ஈ.பி ரோடு அருகே பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. ஈபி ரோடு அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்பு, நோட்டுப் புத்தகங்கள் போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேற்கண்ட நிகழ்வுகளில் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்களும், கழக தோழிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Comments are closed.