Rock Fort Times
Online News

அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தொகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது திருப்பராய்த்துறை ஊராட்சி. இங்கு வசிக்கும் மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும், இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று( ஜூன் 18) திருச்சி- கரூர்
சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜீயபுரம் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்