திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக தட்சிணாமூர்த்தி பணியாற்றி வந்தார். மருத்துவ விடுப்பில் இருந்த அவர் திருச்சி, துவாக்குடி- பூலாங்குடி அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், காவல் உதவி ஆய்வாளர் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், தட்சிணாமூர்த்தி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.