Rock Fort Times
Online News

திருச்சியில் மாநகராட்சியில் 24 மணி நேரம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை! மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மு அன்பழகன் தகவல் !

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்ய ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் பலரும் தங்களது பகுதியில் நிலவும் கோரிக்கைகள் குறித்து மேயர் மு.அன்பழகனிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்து பேசியபோது திருச்சி மாநகராட்சியில் 65 வார்டு மக்களுக்கும் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.  மாநகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக தான் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். இனி வருங்காலத்தில் திருச்சியில் குடிநீர் தட்டுப்பாடு இருக்கவே இருக்காது என மேயர் தகவல் தெரிவித்தார்.  இக்கூட்டத்தில் அரசாணை எண் 317ன் படி, அரசு மற்றும் உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 சதவீத அகவிலைப்படியிலிருந்து மூன்று சதவீதம் கூடுதலாக உயர்த்தி, 53 சதவீதமாக ஜூலை 1ம் தேதியில் இருந்து கணக்கிட்டு தற்போதுவரை உரிய நிலுவை அகவிலைப்படி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்