திருச்சி, காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ் என்கிற தமிழரசன். பிரபல ரவுடியான இவர் மீது திருவெறும்பூர் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை , வழிப்பறி, திருட்டு, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நாட்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டு காட்டூர் பகுதியில் மிரட்டி வழிப்பறி செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருவெறும்பூர் காவல் நிலைய சஃப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் காட்டூர் அம்மன் நகர் பகுதிக்கு சென்றனர். போலீசாரை பார்த்த ரவுடி தமிழரசன் துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளான். அதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தமிழரசனை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
Comments are closed.