புதுக்கோட்டையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் அருகே போலம்பட்டி வெட்டுக்காட்டைச் சேர்ந்தவர் சோலையப்பன் (53). இவர், கடந்த 2022 ஆகஸ்ட் 21ஆம் தேதி 2-ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அவரது பெற்றோர் இலுப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போக்சோ மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சோலையப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து இன்று (01- 04- 2024) தீர்ப்பளிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சோலையப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு தொகையாக ரூ.4 லட்சம் மற்றும் குற்றவாளியிடம் பெறப்படும் அபராத தொகை 30 ஆயிரத்தையும் சேர்த்து வழங்க வேண்டும். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி எஸ்.ஜெயந்தி தீர்ப்பளித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.