திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள பெரிய சௌராஷ்டிரா தெருவில் தள்ளு வண்டியில் வாழைப்பழம் விற்பவரிடம் கத்தியை காட்டிமிரட்டி 2 வாலிபர்கள் பணம் பறிக்க முயன்றனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அந்த வாலிபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளிடம் கஞ்சா மற்றும் மது போதையில் சில வாலிபர்கள் இதுபோன்று தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.