திருச்சி மாநகராட்சியுடன் 10 க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல, இன்று(20-01-2025) குமார வயலூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அதிகாரிகளும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கை குறித்து கோரிக்கை மனு அளிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதால் சாலை மறியலை கைவிட்டு மனு கொடுக்க சென்றனர்.
Comments are closed.