Rock Fort Times
Online News

திருச்சியில் நடைபெற்ற ‘லோக் அதாலத்’ மூலம் பயனாளிக்கு ரூ. 9.75 கோடி இழப்பீடு…* மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் வழங்கினார்..!

திருச்சி நீதிமன்றத்தில் இன்று ( ஜூன் 13 ) தேசிய மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.
பொதுமக்களின் வழக்குகளுக்கு சமரசம் காணும் பொருட்டு நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இதில் காவேரி – குண்டாறு- வைகை நதி நீரிணைப்பு திட்டத்திற்காக ஸ்ரீரங்கம் தாலுகா, நாகமங்கலம் பஞ்சாயத்தைச் சேர்ந்த ராமநாதன் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இது சம்மந்தமான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் சமரசம் ஏற்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 9 கோடியே 75 லட்சத்து 20 ஆயிரத்து 69 ரூபாய்க்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், பயனாளி இடம் வழங்கினார். இதேபோல பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்