தமிழ்நாட்டின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சியில் பன்னாட்டு விமான நிலையம், விசாலமான ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்திற்கு இணையாக பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைந்துள்ளன. மத்திய, மாநில அரசுகளின் பிரபல கல்வி நிறுவனங்களும் அமைந்துள்ளன. இதனால், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் திருச்சியில் தங்கி இருந்து கல்வி பயின்று வருகின்றனர். திருச்சி, திருவெறும்பூரில் 148 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான முறையில் இரண்டாவது மெகா தொழில் பூங்காவும் அமைக்கப்பட்டு வருகிறது. அதோடு திருச்சியில் நவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட நட்சத்திர ஹோட்டல்களும் கட்டப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தென் கொரியாவின் உலகப் புகழ்பெற்ற நைக்(Nike) காலணி தயாரிப்பு நிறுவனம் திருச்சி, நவல்பட்டு பகுதியில் ரூ.174 கோடியில் தனது உற்பத்தி மையத்தை தொடங்குகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இந்தத் தொழில் நிறுவனம் திருச்சியில் அமைவதன் மூலம் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.