தனது முதல் மாத சம்பளம் ரூ.1 லட்சத்தை ஏழை மக்களுக்கு பிரித்துக் கொடுத்த த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்…!
செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சரவணன். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் விஜயின் தீவிர ரசிகராகவும், பின்னர் விஜய் கட்சி தொடங்கியது முதல் கட்சிப் பணிகளிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இதன் காரணமாக இவருக்கு இந்த தொகுதியில் போட்டியிட கட்சியின் தலைவர் விஜய் வாய்ப்பு வழங்கியிருந்தார். இந்த தொகுதியில் அவர் வெற்றியும் பெற்றார். இதற்கு முன்பு ஆட்டோ ஓட்டி, கட்டிட வேலை செய்து அதில் கிடைத்த கொஞ்ச வருமானத்திலும் ஏழைகளுக்கு உதவிகளை செய்து வந்தார். தற்போது சட்டமன்ற உறுப்பினர் ஆனதும் அவருக்கு ரூ.1 லட்சம் சம்பளம் கிடைத்தது. அந்த சம்பளத்தை தான் வைத்துக் கொள்ளாமல் அதனை ஏழை மக்களுக்கு பிரித்துக் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி, சாலையோரம் வியாபாரம் செய்யும் பெண்ணுக்கு 25 ஆயிரம் கொடுத்து கடை வைத்து கொடுத்திருக்கிறார்.மாற்றுத்திறனாளி குழந்தைக்கு 25 ஆயிரம் மற்றும் இன்னும் இரண்டு குழந்தைகளுக்கு ஊக்கத்தொகையாக 25 ஆயிரம் கொடுத்திருக்கிறார். அவரது இந்த நற்செயலை கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Comments are closed.