கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று வரை 59 பேர் பலியான நிலையில் இன்று (26-06-2024) மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஏசுதாஸ் (39) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார்(37) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் தற்போது 60-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments are closed.