வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 2004-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து , அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது தாசில்தாராக பணிபுரியும் 110 நபர்களுக்கு துணை கலெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.