மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு எப்போது?-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளை மீண்டும் நடத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், தென் மாவட்டங்களில் ஜனவரி 2ல் பள்ளிகள் திறக்கும்போது அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும். மழை, வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு நகல் சான்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2 முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும். 6 முதல் 9ம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால சிறப்பு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.