Rock Fort Times
Online News

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சபாநாயகரை கண்டித்து தீர்மானம்…

சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று(26-12-2023) நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார். பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக கண்டனம் தெரிவித்தது. மேலும், நாடாளுமன்ற தேர்தலையொட்டி குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்வது. நீட் தேர்வுக்கு வில க்கு அளிக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் நலன் காக்க இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். பொருளாதார இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை துரிதமாக வழங்க வேண்டும். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிப்பது. 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற களப்பணி ஆற்றுவது. முன்னாள் முதல்- அமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்பன உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட வில்லை.கூட்டத்தில், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கட்சியின் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார். அதிமுக மதுரை மாநாட்டிற்கான செலவு 2 கோடியே 24 லட்சம் என கணக்கு விவரம் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக சார்பில் மதுரை நடைபெற்ற மாநாட்டின் மூலம் 2 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் நிதி பெறப்பட்டது. மதுரை மாநாட்டிற்கான செலவைவிட வரவு 1.20 லட்சம் கூடுதலாக வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். கட்சியில் ரூ.261.80 கோடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்