Rock Fort Times
Online News

திருச்சி எம்.பி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரின் சின்னம் என்ன? நாளை சொல்கிறார் துரை வைகோ…

நடைபெற இருக்கிற மக்களவைத் தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, தொகுதிக்குட்பட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் , திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்நிகழ்வில், மக்கள் நீதி மையம் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர் கிஷோர் குமார் தலைமையிலான நிர்வாகிகள் வேட்பாளர் துரை வைகோவுக்கு ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர்.

அதன்பிறகு செய்தியாளர்களுக்கு துரை. வைகோ பேட்டி அளித்தார். அதில் என்ன சின்னம் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து நாளை செய்தியாளர்களை நேரில் அழைத்து தெரிவிப்பேன். தேர்தல் காலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என வலியுறுத்தி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். அது காவல்துறையினரின் கடமையாகும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். சாதாரண எளிய மக்கள், வியாபாரிகள் திருமண நிகழ்ச்சி, மருத்துவமனை செலவினங்களுக்கு பணம் எடுத்துச்செல்லும் போது பறக்கும் படையினரின் சோதனையால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுபோன்ற நேரங்களில் காவல்துறையினர் கருணை உள்ளத்தோடு நடந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையமும் கருணை உள்ளத்தோடு அணுக வேண்டும். மோடி தேர்தல் நேரங்களில் மட்டுமே தமிழகத்திற்கு வருகை தருகிறார். சென்னை மற்றும் தென்மாவட்டங்கள் புயல் மழையால் அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சுமார் 37ஆயிரம் கோடி சொத்துக்கள் அழிந்த போது வராத மோடி, தற்போது ஏன் அடிக்கடி வருகிறார். மோடி எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும், தமிழகத்திலேயே குடியிருந்தாலும், நமோ செயலிகளில் நிர்வாகிகளை சந்தித்தாலும் சரி, 40 க்கு 40ம் திமுகவிற்கென தமிழக மக்கள் தீர்க்கமான முடிவெடுத்து விட்டார்கள். திருச்சி தொகுதி மக்கள் எனக்கு அமோக வரவேற்பளிப்பதாக கூறினார்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஸ்ரீரங்கம் பாலசுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் கருப்பையா, நம்மவர் நற்பணி இயக்க அணி அமைப்பாளர் குமார், மகளிரணி அமைப்பாளர் ஸ்ரீரங்கம் சுமதி, ராணியம்மா, அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் கணேசன், ஆதிதிராவிடநல அணி மாவட்ட அமைப்பாளர் சசிகுமார், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், நகர செயலாளர்கள் கார்த்திக், மிதுன், இளைஞரணி செயலாளர் சதீஷ்நாராயணன், புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், வட்ட செயலாளர்கள் மகாராஜன், கனகராஜ் உள்ளிட்ட மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், திருச்சி மேற்கு மாநகரச் திமுக செயலாளர் மேயர் மு.அன்பழகன், திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் கே.வைரமணி உள்ளிட்ட, திமுக நிர்வாகிகள் மற்றும் மதிமுகவைச் சேர்ந்த மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு.பூமிநாதன், துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பெல்.இராசமாணிக்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றார்கள்.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்