12 ஆம் ஆண்டு நினைவு தினம் : திருச்சியில் கே.என்.ராமஜெயம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான கே. என். ராமஜெயத்தின்
12-ம் ஆண்டு நினைவு நாளை யொட்டி திருச்சி கேர் கல்லூரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுக.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்தநிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, பெரம்பலூர் நாடளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு,திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ,மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா,மதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு தமிழ் மாணிக்கம், சேரன், திருச்சி மத்திய மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நல க்குழு துணை அமைப்பாளர் இன்ஜினியர் எஸ்.முருகவேல் திமுக செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்த நல்லூர் கதிர்வேல், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், மோகன்தாஸ், கவுன்சிலர்கள் நாகராஜன், கமால் முஸ்தபா, மாநகர துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, தில்லை நகர் கண்ணன், வட்டச் செயலாளர் புத்தூர் பவுல்ராஜ், மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி,வக்கீல் அந்தோணி உள்ளிட்ட பல நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.