பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரான கே.என்.அருண் நேருவை ஆதரித்து இன்று மண்ணச்சநல்லூருக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். இதில் அமைச்சர் கே.என் நேரு பேசும்போது., மண்ணச்சநல்லூர் பெரிய நகரமாக உருவாகி வருகிறது. நகரமாக உருவாகும் போது வேலைவாய்ப்பு பெருகும். அதற்கு ஏற்றபடி மண்ணச்சநல்லூரையும், சமயபுரத்தையும் திருச்சி மாநகராட்சியில் இணைத்து புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
பேரூராட்சி உறுப்பினர்களின் பதவி காலம் முடியும் போது மாநகராட்சியாக மாறும். மாநகராட்சியாக ஆகும்போது பூலாம்பாளையம் கிராமத்தில் வேலை வாய்ப்புகள் உருவாகும். தளபதி ஸ்டாலின் அறிவித்த அருண் நேரு வேட்பாளரை தளபதியே நிற்கிறார் என நினைத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். நீங்கள் அழைக்கும் போதெல்லாம் வந்து பணியாற்றக் கூடிய வேட்பாளர் இவர். 40 ஆண்டு காலம் நான் உங்களுக்காக பணியாற்றி வருகிறேன். உங்கள் பேராதரவை உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.