Rock Fort Times
Online News

கப்பலில் போக ஆசையா? நாகையிலிருந்து இலங்கைக்கு 10-ந் தேதி கிளம்புது…

டிக்கெட் வெறும் 8,500 தான்...!

நம்மில் பலருக்கு விமானத்தில் பறக்க வேண்டும், கப்பலில் செல்ல வேண்டும் என்பது சிறு வயது முதலே ஆசையாக இருந்து வருகிறது. வானத்தை அண்ணாந்து பார்ப்போம், கடலை வெறித்து பார்ப்போம், அதோடு சரி. ஆனால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமல் நிராசையாகவே முடிந்து விடுகிறது.

சாமானிய மக்களும் விமானத்தில் பறக்கும் வகையிலும், கப்பலில் செல்லும் வகையிலும் இன்று பல சலுகைகளை பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொடுத்து அவர்களது ஆசையை நிறைவேற்றி வருகின்றன.

அந்தவகையில், நாகையில் இருந்து இலங்கைக்கு வருகின்ற 10ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது. இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 6500 ரூபாய் மட்டுமே. 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன், ஏசி வசதியுடன் கொச்சினில் தயாரிக்கப்பட்ட “சிரியாபாணி” என்ற பெயரிடப்பட்ட கப்பல் 7 ஆம் தேதி நாகை துறைமுகம் வரவுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என மத்திய அரசு அரசு அறிவித்தது. மேலும், மத்திய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதி கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டது. குடியுரிமை பெறுவது, மருத்துவ பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது என அனைத்திற்கும் தனித்தனியாக அறைகள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. மேலும், நாகப்பட்டினம் துறைமுகத்தில் பணியாற்றுவதற்காக பாஸ்போர்ட் சோதனை செய்வது, பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்வது என பல்வேறு பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று பயிற்சி பெற்றனர்.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை சென்று வர 6 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுவதால் பயணிகளுக்கான கட்டணம் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் 6500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் அமைந்துள்ளதால் 3.30 மணி நேரத்தில் கப்பல் மூலம் இலங்கை சென்றடைய முடியும். இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சி துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட “சிரியா பாணி” என்ற கப்பலில் 150 பயணிகள் பயணிக்கும் வகையில் கப்பல் முழுவதும் குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

                           

வருகின்ற 7 ஆம் தேதி சனிக்கிழமை காலை நாகை துறைமுகம் வர உள்ள கப்பலின் சோதனை ஓட்டம் 8 ஆம் தேதி, மற்றும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. சோதனை ஓட்டத்தில் கப்பலில் பணியாற்றும் 14 ஊழியர்கள் மட்டும் பயணம் செய்ய உள்ளனர். பின்னர் 10 ஆம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க உள்ளது. KPV Shaik Mohammed Rowther என்ற தனியார் நிறுவனம் பயணிகள் கப்பலை இயக்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்துள்ளது. துறைமுக நகரம் என்றழைக்கப்படும் நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருப்பதற்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

                               

தவெக செயற்குழு கூட்டத்திற்கு மாஸ் என்ட்ரி தந்த விஜய்...! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..!

1 of 899

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்