போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு காவல் நிலையத்திலிருந்து தப்பியோடிய கள்ளச்சாராய வியாபாரி! நிம்மதி இழந்த சங்கராபுரம் காவல்துறையினர்!
கள்ளக்குறிச்சியில் கடந்த 19-ம்தேதி கள்ளச் சாராயத்தை குடித்த 60-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தற்போதும்பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கள்ளச் சாராய உற்பத்தி, பதுக்கல் மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளச் சாராய வியாபாரிகளைக் கண்டறிந்து, அவர்களைப் போலீஸார் கைது செய்துவருகின்றனர். இந்நிலையில், சங்கராபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்வதாக, சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீஸார் கைது செய்து, சங்கராபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது மணிகண்டன், திடீரென காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடினார். அதிர்ச்சியடைந்த போலீஸார், தப்பியோடிய விசாரணைக் கைதியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Comments are closed.