திருச்சி உறையூர் பாய்க்கார தெருவை சேர்ந்தவர் கதிர் ராஜா. திருச்சி மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக உள்ளார். இவர் பா.ம.க மாவட்ட செயலாளராக முன்பு பணியாற்றியுள்ளார். இவர், தன்னுடைய மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். , இன்று காலை அவர் எழுந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றொரு வாகனம் தீயில் எரிந்து கிடந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து இருக்கலாம், அந்த தீ அருகில் உள்ள வாகனம் மீதும் பரவி இரு வாகனங்களும் எரிந்து உள்ளன. இதுகுறித்து உறையூர் போலீசில் கதிர்ராஜா புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.