நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள த.வெ.க. கூட்டணி ஆட்சியை அமைக்கும் சூழல் உருவாகி உள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கையில் திவிரமாக இறங்கி உள்ளது. இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (மே 6) ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பாக, குதிரை பேரத்தை தடுக்கும் வகையில் எம்எல்ஏக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிகிறது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.