Rock Fort Times
Online News

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28-ம் தேதி வரை நீட்டிப்பு….

அன்றைய தினம் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு...

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவரிடம் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை காவலில் எடுத்து ஐந்து நாட்கள் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் எல்.எல்.ஏ., எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரின் நீதிமன்ற காவலை வரும் 28-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், செந்தில் பாலாஜியை 28-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறைதுறைக்கு நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்