Rock Fort Times
Online News

திருச்சி வழியாக பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயில்- நாளை முதல் இயக்கம்…!

மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு நாளை(26-06-2024) முதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. தமிழகத்தில் தென் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் மதுரையிலிருந்து பெங்களூரு வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, நாளை முதல் அடுத்த மாதம் ஜூலை 29-ம் தேதி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து நாளை காலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சிக்கு காலை 7 மணிக்கு வந்து பின்னர் 7.12 மணிக்கு புறப்பட்டு கரூர், சேலம் வழியாக சென்று பெங்களூருவுக்கு மதியம் 1 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் இந்த ரயில், திருச்சிக்கு இரவு 7.35 மணிக்கு வந்தடைகிறது. இங்கிருந்து 7.40 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 9.45 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்