கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசாரால் சாராய வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. அந்தவகையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கள்ளநத்தம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணப்பாச்சி சுற்றுவட்டாரத்தில் கல்வராயன் மலையையொட்டிய பகுதிகளில் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சுரேஷ் குமார், சமீப காலமாக சாராயம் காய்ச்சி விற்று வந்தது தெரியவந்தது. அதன்பேரில், சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இவர்மீது ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதியப்பட்டு உள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார், அதிமுகவில் விவசாய அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.