Rock Fort Times
Online News

9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்காக “அகல்விளக்கு திட்டம்”- சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று(24-06-2024) நடைபெற்ற கூட்டத்தில், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய ₹50 லட்சம் மதிப்பில் ‘அகல் விளக்கு திட்டம்’ செயல்படுத்தப்படும். உடல், மன, சமூக ரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், இணையதள பயன்பாடுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்கவும் ஆசிரியைகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என்று கூறினார்

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்