Rock Fort Times
Online News

தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய யு.பி.எஸ்.சி இணையதளம்

என்.டி.ஏ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஆயிரக்கணக்கானவர்கள் அவதி...

இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்ற விரும்புபவர்கள் புனேவில் செயல்பட்டுவரும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்ற பின்னரே பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அதன்படி சமீபத்தில் தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ )யில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுஅறிவிப்பு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.  இதற்கான தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.  இந்நிலையில் பலரும் யு.பி.எஸ்.சி யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://upsconline.nic.in வாயிலாக விண்ணப்பித்து வந்தனர்.இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த மூன்று நாட்களாக இந்த குறிப்பிட்ட இணையதளம் செயல்படவில்லை.  இதனால் தகுதியும் ஆர்வமும் உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வழி தெரியாமல் தவித்து வருகின்றனர். விண்ணப்பிப்பதற்கு வருகிற ஜூன் 4ம் தேதியே கடைசி நாள். ஆகவே அதற்குள் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து தரவேண்டுமென இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்