திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முக்கிய விஐபிக் களும் அவ்வப்போது வருகை தருகின்றனர். அந்தவகையில் இன்று(20-07-2024) விஸ்வரூப தரிசனத்தை காண
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார். பின்னர் அவர் கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்துவிட்டு தாயார் சன்னதிக்கு சென்று வணங்கினார். அதனைத் தொடர்ந்து கம்பர் மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு அங்கிருந்து சமயபுரம் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு முருகனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

Comments are closed.