Rock Fort Times
Online News

த.வெ.க. தொடர்ந்து முன்னிலை: பாதுகாப்பு வளையத்தில் விஜய் இல்லம்…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று (மே 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஆரம்ப கட்டத்தில் திமுக முன்னிலை வகித்தாலும் அடுத்தடுத்த சுற்றுகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்று வருகிறது. அதிமுக இரண்டாவது இடத்திலும், திமுக மூன்றாவது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து விஜய் கட்சி முன்னிலை பெற்று வருவதால்
விஜய் இல்லத்தின் வெளியே ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் சி.ஆர்.
பி.எப்.வீரர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விஜய் இல்லத்திற்கு வர கூடிய கபாலீஸ்வரர் நுழைவாயிலில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ரசிகர்கள், தொண்டர்கள் அதிகளவில் கூடாமல் இருக்க
இந்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்