Rock Fort Times
Online News

திருச்சியில் சாவிலும் இணைபிரியாத தம்பதி- கணவர் இறந்த சற்று நேரத்தில் மனைவியும் உயிரிழந்தார்…!

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் வசித்து வந்தவர் கணேசன் (வயது 80). இவர் துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கண்ணம்மாள் (70). கடந்த சில மாதங்களாக உடல் நலமின்றி கணேசன் அவதிப்பட்டு வந்தார்.அவரை பக்கத்தில் இருந்து அவரது மனைவி கண்ணம்மாள் கவனித்து வந்தார்.இந்நிலையில் கணேசன் இறந்து போனார்.இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி கண்ணம்மாள் திடீரென மயங்கி விழுந்தார். சற்று நேரத்தில் அவரும் உயிரிழந்தார். இதனால், அவர்களது உறவினர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். உறவினர்கள், நண்பர்கள், அருகில் உள்ளவர்கள் அவர்களது உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.பின்னர், அவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவர்களது உடல்கள் ஒன்றாக எடுத்துச் செல்லப்பட்டு
ஓயாமரி மயானத்தில் உறவினர்கள் தகனம் செய்தனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். வாழும் போதும் ஒன்றாகவே வாழ்ந்து, சாவிலும் ஒன்றாக இணைந்த அந்த தம்பதியின் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்