Rock Fort Times
Online News

ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு வழங்கிய பெண்ணுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு-விருது…!

மதுரையை சேர்ந்த ஆயி அம்மாள் என்பவர் தனது 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறைக்கு தானமாக வழங்கி உள்ளார். அவரது இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் வெகுவாக பாராட்டியதோடு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம். ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் பெறுவார்கள். கல்வியையும், கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தை போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

திருச்சியில் "திக்... திக்... நிமிடங்கள்” - பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்!

1 of 874

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்