திருச்சி பால்பண்ணை மேம்பாலத்தில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி விபத்து…* போக்குவரத்து பாதிப்பு..!
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காலை முதல் இரவு வரை வாகனங்கள் எப்போதும் அதிகளவில் செல்லும். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏதாவது சிறு விபத்து ஏற்பட்டாலும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும். இந்த நிலையில் இன்று(26-10-2026) பால்பண்ணை மேம்பாலத்தில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தால் சென்னை பைபாஸ் மேம்பாலத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் பள்ளிப் பேருந்தில்
பயணித்த மாணவர்கள் மற்றும் பேருந்தில் பயணித்த குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் விபத்து குறித்து தகவல அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை
சீரமைத்தனர். மேலும், இந்த விபத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.