Rock Fort Times
Online News

ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது…!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் பண மோசடி செய்ததாகப் பதிவுச் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த திமுக ஆட்சியில் 1,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, முன்னாள் அமைச்சர் அன்பில்
மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, தன் மீது போடப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(26-10-2026) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், தற்போது அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முத்துக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதால், அவர் குறித்த விவரங்களை அன்பில் மகேஸிடம் கேட்டு போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்