Rock Fort Times
Online News

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் அ.தி.மு.க. சாா்பில் 4  பொதுக்கூட்டம் – மு. பரஞ்சோதி அறிக்கை..

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியிலும் நடைபெற உள்ளது. வருகிற 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சா. அய்யம்பாளையத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வடுகபட்டி பே.சுந்தரபாண்டியன், கோதை தங்கவேல், ஆகியோரும், 18-ம் தேதி (புதன்கிழமை) மாலை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பெட்டவாய்த்தலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர் பி.தங்கமணி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் எஸ்.சாரதா ஆகியோரும், வருகிற 26 ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 6:00 மணிக்கு முசிறி சட்டமன்ற தொகுதி தும்பலம் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கரூர் எம். சின்னசாமி, திரைப்பட இயக்குனர் சக்தி என்.சிதம்பரம் ஆகியோரும், 28 ம் தேதி ( சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு துறையூர் சட்டமன்ற தொகுதி கீரம்பூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திருப்பூர் ஆர்.சாந்தி, என். முஜிபுர் ரஹிமான் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேச உள்ளனா். எனவே தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு  அதில் அவர் கூறியுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்