திருச்சி, காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளியின் 21வது ஆண்டு விழா…* கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு!
திருச்சி, காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளியின் 21- வது ஆண்டுவிழா இம்மாதம் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய இருதினங்களில் மாண்ட்போர்ட் ஆடிட்டோரியத்தில் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. ஜூனியர் பள்ளியின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளரும், எழுத்தாளருமான முனைவர் பர்வின் சுல்தானா பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில், ஒரு குழந்தை தன் வாழ்வில் வெற்றி பெறவும், இந்த சமூகத்திற்கு பொறுப்புள்ள குழந்தையாக வளர்ந்திடவும், சிறுபருவத்திலேயே அவர்களின் திறமையை கண்டறிந்து, அவர்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும் என்றார். அடுத்ததாக, நவம்பர் 27 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற சீனியர் பள்ளியின் ஆண்டு விழா
நிகழ்ச்சியில் கபிரியேல் சபையின் திருச்சி மாகாணத் தலைவர் அருட்சகோதரர் ஜான் பிரிட்டோ, தலைமை விருந்தினராக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும், சிறந்த பேச்சாளருமான டாக்டர் ஏ. கலியமூர்த்தி கலந்து கொண்டனர். அப்போது கலியமூர்த்தி பேசுகையில், ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மேம்படுத்துவது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய இருவரின் கடமை. அதனை மிக சிறப்பாகவும் சுயநலமில்லாத தொலைநோக்கு பார்வையோடுடன் செய்திட வேண்டும்
என்று பேசினார்.
இருதினங்களிலும் நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகளின் மூலம் இன்றைய நவீன யுகத்தில் மாணவர்கள் மின்னனு சாதனங்களையும், அலைபேசியையும் எப்படி தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும் என்ற அரிய கருத்துக்களை நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் வாயிலாக விளக்கினார்கள். இவ்விழாவில் மாணவ, மாணவிகளின் சாதனைகளை பெருமைப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஆண்டு விழா நிகழ்ச்சியின் தலைவராக பங்கேற்ற கபிரியேல் சபையின் திருச்சி மாகாணத் தலைவர் அருட்சகோதரர் ஜான் பிரிட்டோ உரையாற்றுகையில், சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்ற அனைத்து மாணவ மாணவிகளையும் பெரிதும் பாராட்டினார். பள்ளிமுதல்வர் அருட்சகோதரர் ராபர்ட் லூர்துசாமி ஏற்புரை வழங்கினார். இந்த 21 வருட ஆண்டு.விழாவினை மிகச்சிறப்பாக. முழுமையான அர்ப்பணிப்புடன் திறம்பட அமைய துணை புரிந்த துணைமுதல்வர் அருட்சகோதரர்கள், மற்றும் அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் அனைத்து வகை பணியாளர்களையும் பாராட்டினார்.


Comments are closed.