திருச்சி, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ் (வயது 54). இவர் இன்று(24-06-2024) அதிகாலை 3 மணியளவில் தனது நண்பர்கள் குறிஞ்சி செல்வன், சதீஷ்குமார் ஆகியோருடன் காரில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். கரட்டுப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே படுத்து மூவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், வெங்கடேஷ் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை நைசாக திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சற்று நேரத்துக்கு பிறகு எழுந்த வெங்கடேஷ், கழுத்தில் தங்க சங்கிலி இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின்பேரில் வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சப்- இன்ஸ்பெக்ட ரிடமே மர்ம நபர் கைவரிசை காட்டிய சம்பவம் திருச்சி காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.