Rock Fort Times
Online News

திருச்சி, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சலவைத் தொழிலாளி இசிஜி எடுக்கும் அவலம்…! (வீடியோ இணைப்பு)

திருச்சி,  ஸ்ரீரங்கத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  குழந்தைகள் பிரிவு, பொது மருத்துவம் உள்பட பல்வேறு பிரிவுகள் உள்ளது. இங்கு ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மண்ணச்சநல்லூர், சமயபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து  நாள்தோறும் 600 முதல் 700 புற நோயாளிகளும், நாள் ஒன்றுக்கு 80 உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு,  24 மருத்துவர்கள் உள்ளனர்.  இந்தமருத்துவமனையில் qpms என்னும் நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் மருத்துவமனையில் தூய்மை மற்றும் மருத்துவ உபகரணங்களை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த நிறுவனத்தின் சலவை பிரிவில் பணியாற்றும் பெண் பணியாளர் கன்னியம்மாள் என்பவர்  ரேடியோலஜிஸ்ட் இல்லாமல் நோயாளிகளுக்கு இசிஜி எடுக்கிறார்.  எதிரே உள்ள நபர் கேட்கும் கேள்விகளுக்கு ஆளில்லாத காரணத்தால் தான்  இசிஜி எடுத்து வருவதாகவும், ரேடியோலஜிஸ்ட்  மூர்த்தி சார் தான் எடுக்க சொன்னார் எனக் கூறும்  வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதுகுறித்து மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கூறுகையில், இங்கு ரேடியோலஜிஸ்ட் ஆக மூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.  அவர் பணியில் இருந்தநிலையில் கன்னியம்மாள் இசிஜி எடுத்துள்ளார். சலவை தொழிலாளிக்கு என்ன தெரியும். இது முற்றிலும் தவறுதான் என்று கூறினார்.  இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில்,  மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்காக ஒரு சலவை தொழிலாளியை இசிஜி எடுக்கச் சொல்வது எந்த விதத்தில் நியாயம். ஒரு நோயாளியின் உயிரை காப்பாற்ற தான் அரசு, மருத்துவ ஊழியர்களை நியமித்து அவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கி வருகிறது. ஆனால், ஒரு சில மருத்துவ ஊழியர்கள் தங்களது கடமையை ஒழுங்காக செய்யாமல் இதுபோன்று அசால்டாக இருக்கிறார்கள்.  இந்த மருத்துவமனையில் கவனக்குறைவாக செயல்பட்ட சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்