Rock Fort Times
Online News

பதறாதீங்க… டாஸ்மாக் கடைகளில் இனிமேல் இந்த 11 வகையான பிராந்தி, ரம் கிடைக்கவே கிடைக்காது… விற்பனையை உடனடியாக நிறுத்த அரசு உத்தரவு..!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரபல 11 மதுபான வகைகளை விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் கே. நந்தகுமார் ஐஏஎஸ் அனைத்து மண்டல, மாவட்ட மற்றும் கிடங்கு மேலாளர்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,

  1. விஎஸ்ஓபி எக்ஷா கோல்டு பிராந்தி
  2. லூயிஸ் வெர்னான்ட் எக்ஸ்ஓ பிராந்தி
  3. மெக்டொவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி
  4. நெம்பர் 1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி
  5. மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி
  6. ஹனி பீ ஃபைன் பிராந்தி
  7. என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்தி
  8. என்ரிகா பிரீமியம் பிரெஞ்சு பிராந்தி
  9. என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி
  10. வீரன் ஸ்பெஷல் பிராந்தி
  11. என்ரிகா ஓல்ட் இன்டி கிளாசிக் டார்க் ரம்

என்ரிகா நிறுவனத்தின் இந்த 11 மது வகைகளையும் டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு மாற்றுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற பார்கள், நட்சத்திர ஹோட்டல்களுக்கு இந்த 11 பிராண்டுகளை சப்ளை செய்யக் கூடாது. மறுஉத்தரவு வரும் வரை, தமிழ்நாட்டிலுள்ள எந்தவொரு டாஸ்மாக் கடையிலும் இந்த 11 மதுபானங்களையும் நுகர்வோருக்கு விற்கக் கூடாது. என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியார் மதுபான உற்பத்தி நிறுவனத்தில், கடந்த ஆகஸ்ட் 11, 2026 அன்று FSSAI தெற்கு மண்டல அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அந்த நிறுவனம் தயாரிக்கும் மதுபானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி, ஆபத்தான மற்றும் செயற்கையான சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது நுகர்வோரின் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்பதால், இந்த 11 பிராண்டுகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்