இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திரதினம் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 15) எழுச்சியுடன் கொண்டாடப்பட உள்ளது. அன்றையதினம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தாயள், திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொள்ள உள்ளார்.
முன்னதாக சுதந்திரதின விழாவில் பங்கேற்கும் காவல்துறையினருக்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் 250க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் காவலர்கள் துப்பாக்கி ஏந்தியபடியும், அதனைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினர், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் பங்கேற்று அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Comments are closed.