Rock Fort Times
Online News

பண்ருட்டி அருகே கொடிக்கம்பம் நடும்போது பரிதாபம்: மின்சாரம் பாய்ந்து தேமுதிக நிர்வாகி பலி…!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே நடுக்குப்பத்தில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று(25-08-2024) ஞாயிற்றுக்கிழமை காலை கொடிக்கம்பம் நட்டுள்ளனர்.  அப்போது, கொடிக்கம்பத்தை நிமிர்த்தும்போது, எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து நடுக்குப்பம் தெற்குத் தெருவைச் சேர்ந்த தேமுதிக கிளைச் செயலாளர் ராமர் மகன் வெங்கடேசன் (40) மற்றும் மேற்கு தெருவைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் மதியழகன் (40), வடக்குத் தெருவைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பிரகாஷ் (40), நடுக்குப்பம் தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் செல்வகுமார் (41), கிழக்குத் தெருவைச் சேர்ந்த அருணாசலம் மகன் பழனிவேல் (42), நடுத்தெருவைச் சேர்ந்த கோதண்டபாணி மகன் செல்வம் (42) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதில், வெங்கடேசன் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார். மற்ற 5 பேரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முத்தாண்டி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்