திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது…* ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு எழும் கடும் கண்டனம்..!
திமுகவுக்கு வாக்களிக்காமல் தவெகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நல்ல சாவே வராது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக அவர் சென்னை காரப்பாக்கத்தில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசுகையில், 1996-ல் இருந்து 2001 வரை இவ்வளவு சாதனையை செய்தீர்களே.. தோற்று விட்டீர்களே என்று கருணாநிதியிடம் சொன்னபோது, அவர் மிகுந்த உற்சாகத்தோடு சொன்னார். அடுத்த தேர்தல் வருகிறது. அதில் வெற்றி பெறுவதற்கு இப்போதுதான் வாய்க்கால் வெட்டிக்கொண்டு இருக்கிறோம். வாய்க்கால் வெட்டி விட்டால் தண்ணீர் தானாக வரும். 5 ஆண்டு காலம் கழித்து தண்ணீர் வரும். நாங்கள் வெட்டுகிற பாதையில் வரும் என்று சொன்னார். அதையேத்தான் இன்று நானும் சொல்கிறேன். வீட்டு வரி எல்லாம் உயர்ந்துவிட்டது.
அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை? சைதாப்பேட்டை தொகுதிக்கு மா. சுப்பிரமணியன் கொண்டு வந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் ஓட்டு போட்டு இருந்தால்கூட வெற்றி பெற்று இருப்போம். அவர்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது வெளிப்படையாக சொல்கிறேன். காரணம் உயிர் காப்பது என்பது அவ்வளவு கஷ்டமான காரியம். எத்தனை பேர் உயிரைக் காப்பாற்றியிருப்பார். மக்கள் தங்கள் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டு கொண்டுள்ளனர். சைதாப்பேட்டை தொகுதியில்
மா. சுப்பிரமணியன் போல யாரும் செய்யவில்லை. இனிமேல் மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். இனி கட்சிக்காரர்களுக்கு செய்யுங்கள், அது போதும். இனி ஒரு 5 ஆண்டுகளுக்கு ஓய்வு எடுப்போம்” என்றார. அவரது இந்த பேச்சுக்கு அந்த தொகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.