திருச்சி, ஸ்ரீரங்கம், வண்ணத்துப்பூச்சி பூங்கா நாளை ( செப்.17 ) செயல்படும் . மாவட்ட வனத்துறை அதிகாரி அறிவிப்பு
திருச்சி மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஸ்ரீரங்கம், மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க நாளை (செப். 17) மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பூங்கா திறக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் கிருத்திகா அறிவித்துள்ளார்.
Comments are closed.