இன்னர்வீல் கிளப் ஆப் திருச்சி மலைக்கோட்டை சார்பில் 5 தம்பதிகளுக்கு திருமண விழா…!
4 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழாவும் நடத்தி அசத்தல்
இன்னர்வீல் சங்கம் என்பது ஒரு பன்னாட்டு அளவில் இயங்கிவரும் பெண்கள் சங்கம் ஆகும். இச்சங்கம் பன்னாட்டு ரோட்டரி சங்கத்தின் குடும்ப உறுப்பினர்கள் உறுப்பினர்களாக உள்ள அமைப்பாகும். இதன் நோக்கம் நட்பும், சேவையும் ஆகும். திருச்சியில் நான்கு இன்னர்வீல் சங்கங்கள் உள்ளன. அவற்றில் திருச்சி மலைக்கோட்டை இன்னர்வீல் சங்கமும் ஒன்று. இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து 5 தம்பதிகளுக்கு கூட்டு திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர்.
அதன்படி பி.பி.ரஞ்சித்- பி.சித்ரா, எஸ்.பழனிச்சாமி-எஸ் சாந்தி, டி.வி.ஆர்.நிதீஷ்குமார், ஜி.கோமதி, ஆர். சீத்தாராமன்-வி நிஷாந்தினி, ஏ.பிரசாந்த் -பர்னா ஆகிய ஐந்து தம்பதிகளுக்கு திருமண விழா திருச்சி மாவட்டம் கோபுரப்பட்டி, மணவாளபுரத்தில் உள்ள ஸ்ரீஆதி நாயக பெருமாள் கோவிலில் இன்னர் வீல் சங்க மாவட்ட தலைவி ஸ்வர்ணலதா அருணாச்சலம் முன்னிலையில் 16-09-2024 ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற்றது.
திருமண விழாவில் இன்னர் வீல் கிளப் ஆப் திருச்சி மலைக்கோட்டை தலைவர் ஸ்ரீதேவி ராஜு, செயலர் பூர்ணா விக்ரம் மற்றும் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண விழாவில் மணமக்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருமண விழாவையொட்டி அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. அதனைத்தொடர்ந்து 4 கர்ப்பிணி பெண்களுக்கு சங்கம் சார்பில் வளைகாப்பு விழாவும் நடத்தி வைக்கப்பட்டது. உறவினர்களும், நண்பர்களும் வளையல் அணிவித்து வாழ்த்தினார்கள்.
Comments are closed.