Rock Fort Times
Online News

திருச்சி எஸ்.ஆர்.சி. கல்லூரி ரோட்டராக்ட் மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி…!

சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புகையில்லா வாழ்க்கையின் நன்மைகளை எடுத்துரைக்கும் வகையிலும் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி ரோட்டராக்ட் சங்கம் மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி ஜனவரி  21-01-2025 அன்று நடைபெற்றது. பேரணியை கல்லூரியின் முதல்வர் எம்.வி. அல்லி மற்றும் சுயநிதி பிரிவு பொறுப்பாளர் ஆர். சாந்தி ஆகியோர் தொடங்கி வைத்து உரையாற்றினர். கல்லூரியில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்கக் கூடாது, சிக்னல்களில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், புகை பிடிக்கும் பழக்கத்தின் தீமைகள் மற்றும் புகையில்லா வாழ்க்கையின் தேவை குறித்தும் கோஷமிட்டபடி சென்றனர். பேரணியை ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பா.நித்தியா, பி.ஸ்ரீமதி மற்றும் சாலை பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர்கள் வான்மதி, கோகிலா ஆகியோர் ஒருங்கிணைத்து வழி நடத்தினர். பாதுகாப்பு பணியில் கோட்டை போலீசார் ஈடுபட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்