திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் திண்ணைப் பிரச்சாரம்…
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சியினர் தற்போது தேர்தல் களத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் “இல்லத்தோறும் ஸ்டாலினின் குரல்” என்ற தலைமை கழக அறிவிப்பின்படி திண்ணை பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனை தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
பின்னர், திருச்சி கிழக்குத் தொகுதியில் 65வது வார்டு ஏர்போர்ட் புதுத்தெரு பகுதியில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று பெண்களிடம் வழங்கிய அமைச்சர், தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கிக் கூறியதோடு குழந்தைகளின் கல்வித்தரம் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது அவர், மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. இதையெல்லாம் மீறி ஒரு நல்லாட்சியை தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. இதனை நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதாது மற்றவர்களுக்கும் எடுத்து கூறி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். திண்ணைப் பிரச்சாரத்தில், கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், தொகுதி பொறுப்பாளர் ராஜேஷ் , பகுதி கழகச் செயலாளர் மணிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் பகுதி, வட்ட கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.