தேர்தல் தொடர்பாக வீடியோ மற்றும் போட்டோகிராபர் பணியினை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது- திருச்சி கலெக்டரிடம் மனு…!
திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் 1800 உறுப்பினர்களுக்கும் மேலாக சிறப்பாக இயங்கி வருகின்றது. இந்த சங்கம் முறையாக பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் ஆதி சரவணன், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ரம்ஜான், துணைத் தலைவர் ஆனந்த், துணைச் செயலாளர்கள் அருண், பாலசுப்ரமணியன், முன்னாள் தலைவர்கள் முனவர் பாஷா , நிக்சன், முன்னாள் பொருளாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்தனர்.
அந்த மனுவில், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் வீடியோ மற்றும் போட்டோ முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தப் பணியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். அந்தப் பணியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்காமல் எங்களைப் போன்ற பதிவு பெற்ற வீடியோ மற்றும் போட்டோகிராபர்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதன்மூலம், எங்களின் வாழ்வாதாரம் சிறக்கவும், மேம்படவும் ஒரு நல்வாய்ப்பாக அமையும். எங்களின் இந்த கோரிக்கையை ஏற்று தாங்கள், தங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் பணியை வழங்கிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.