திருச்சி கே.கே. நகரில் உள்ள மாநகர காவல்துறை ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி ரைபில் கிளப்பில் மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்ள வசதியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு இந்திய தேசிய ரைபிள் கிளப்பின் தென் மண்டலம் சார்பில் துப்பாக்கி சுடும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு ரைபிள் மற்றும் பிஸ்டல் பிரிவில் பயிற்சி அளிப்பதற்குரிய ஒரு வார பயிற்சி வகுப்புகள் மே 21 முதல் 27 தேதி வரை , நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு பயிற்சி வகுப்பினை, திருச்சி ரைபிள் கிளப் தலைவரும், மாநகர, போலீஸ் கமிஷனருமான எம். சத்திய பிரியா ஐபிஎஸ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் : “எந்தவொரு போட்டியாக இருந்தாலும் அதில் சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதில் பயிற்சியாளரின் பங்கு முக்கியமானது. அனைவரும் சிறப்பாக பயிற்சி பெற்று சிறந்த வீரர், வீராங்கனைகளை நாட்டுக்காக உருவாக்க வேண்டும். பல நாடுகளில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டிகளில் நம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் வகையில் பயிற்சியளிக்க வேண்டும்.அவர்கள் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க செய்ய வேண்டும் என்றார். அப்போது திருச்சி ரைபிள் கிளப் செயலாளர் செந்தூர்செல்வன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் மூத்த துணை தலைவர் மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கத்தின் தலைவர் சீதாராமராவ், இந்திய ரைபிள் சங்க (என்.ஆர்.ஏ.ஐ) இணை செயலாளர் மற்றும் கல்வி திட்ட இயக்குநர் பவன்சிங், பயிற்சியாளருக்கான கல்வி திட்டத்தின் அனந்த்முரளி, தகவல் தொடர்பின் பயிற்றுனர் இந்திராஜித்சென் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த 30 பேர் பங்கேற்றுள்ளனர். தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.