சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்திற்கு மணப்பாறை த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் ரா.கதிரவன் உதவி…!
திருச்சி மாவட்டம், மணப்பாறை 15 வது வார்டு சேதுரத்தின புரத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (43). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். முதல் குழந்தை பரணி ராஜன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் அஸ்மிதா ஸ்ரீ ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாண்டியராஜனுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். இதனால் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருந்த நிலையில் இதுகுறித்து மணப்பாறை த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் ரா.கதிரவனிடம் தனது குடும்ப நிலை குறித்து மனு அளித்திருந்தார். அவரின் மனுவை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் ரா.கதிரவன் தனது அலுவலகத்திற்கு குடும்பத்தினரை வரவழைத்து குடும்ப செலவினங்களுக்காக ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். மேலும், குழந்தைகளின் படிப்பு சம்பந்தமான எவ்வித உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக தெரியப்படுத்தும்படி கேட்டு கொண்டார். தங்களுக்கு உதவிய சட்டமன்ற உறுப்பினருக்கு பாண்டியராஜன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Comments are closed.