திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சுனைபுகநல்லூர் வடகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டிரைவர் கோவிந்தராசு. இவரது மனைவி சூரியகாந்தி ( வயது 38). இவர்களுக்கு ராகுல் (15), சாதனா (9) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சூரியகாந்திக்கு கர்ப்பப்பை வீக்காக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் சூரியகாந்தி மீண்டும் கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவரை பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உறவினர்கள் சேர்த்து இருந்தனர். அவருக்கு பிரசவ வலி வராததால் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது . இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சூரியகாந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் ரத்தப்போக்கு அதிகமாக இருந்துள்ளது. இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . இந்நிலையில் நேற்று சூரியகாந்தியின் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய போது மூச்சுத் திணறல் காரணமாக அவர் இறந்து போனார். பிரசவத்தின் போது தாயும்- சிசுவும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வாத்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.